(எண்ணிய காரியம் கைக்கூட இப்பாமாலையை தினமும் பாராயணம் செய்யலாம்.)
பந்தம் அகற்றும் அனந்த குணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ ?
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ?
சாந்த மறைஆ கமங்கள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ ?
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றாம்.
உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருள் எவன்? அவ்
வுலகில் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டும் கலைக்கண் எவன்? அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றாம்.
இடர்கள் முழுதும் எவன் அருளால்
எரிவீ ழும்பஞ்சு எனமாயும்?
தொடரும் உயிர்கள் எவன் அருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்?
கடவுள் முதலோர்க்கு ஊறுஇன்றிக்
கருமம் எவனால் முடிவுறும்?அத்
தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றாம்.
மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்து அறியாத்
தரத்தி னாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப் பான்எவன்? அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்.
செய்யும் வினையின் முதல்யாவன் ?
செய்யப் படும் அப் பொருள் யாவன்?
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன்யாவன்?
உய்யும் வினையின் பயன்விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன்? அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன்? விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன்? விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன்? எண் குணன் எவன்? அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்.
மண்ணின் ஓர் ஐங் குணமாகி
வதிவான் எவன்? நீர் இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன்? தீயின்
மூன்றாய் நவில்வான் எவன்? வளியின்
என்னும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்? வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன்? அக் கணபதியை
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்
பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கு அறிய பரன்யாவன்?
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கு அவன் யாவன்?
பாச அறிவும் பசு அறிவும்
தேகன் எவன்? அக் கணபதியைத்
தொழுது சரணம் அடைகின்றாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக