Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 மார்ச், 2010

காரிய சித்திமாலை(விநாயகர் ஸ்லோகம் 3)


(எண்ணிய காரியம் கைக்கூட  இப்பாமாலையை தினமும் பாராயணம் செய்யலாம்.)

பந்தம் அகற்றும் அனந்த குணப் 
பரப்பும் எவன்பால் உதிக்குமோ ?
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ?
சாந்த மறைஆ கமங்கள் 
அனைத்தும் எவன்பால் தகவருமோ ?
அந்த இறையாம் கணபதியை 
அன்பு கூரத் தொழுகின்றாம்.

உலகம் முழுதும் நீக்கமற 
ஒன்றாய் நிற்கும் பொருள் எவன்? அவ்
வுலகில் பிறக்கும் விகாரங்கள் 
உறாத மேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை 
ஊட்டும் கலைக்கண் எவன்? அந்த 
உலக முதலைக் கணபதியை 
உவந்து சரணம் அடைகின்றாம்.

இடர்கள் முழுதும் எவன் அருளால் 
எரிவீ ழும்பஞ்சு எனமாயும்?
தொடரும் உயிர்கள் எவன் அருளால் 
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்?
கடவுள் முதலோர்க்கு ஊறுஇன்றிக் 
கருமம் எவனால் முடிவுறும்?அத்
தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றாம்.

மூர்த்தி யாகித்  தலமாகி
முந்நீர் கங்கை முதலான 
தீர்த்தம் ஆகி அறிந்து அறியாத் 
தரத்தி னாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை 
அகற்றி அறிவிப் பான்எவன்? அப்
போர்த்த கருணைக் கணபதியைப் 
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்.

செய்யும் வினையின் முதல்யாவன் ?
செய்யப் படும்  அப் பொருள் யாவன்?
ஐயம் இன்றி உளதாகும் 
அந்தக் கருமப் பயன்யாவன்?
உய்யும் வினையின் பயன்விளைவில் 
ஊட்டி விடுப்பான் எவன்? அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன்? விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன்?  விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன்? எண் குணன் எவன்? அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்.

மண்ணின் ஓர் ஐங் குணமாகி
வதிவான் எவன்? நீர் இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன்? தீயின்
மூன்றாய் நவில்வான் எவன்? வளியின்
என்னும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்? வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன்? அக் கணபதியை
புகழ்ந்து சரணம் அடைகின்றாம்

பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கு அறிய பரன்யாவன்?
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கு அவன் யாவன்?
பாச அறிவும் பசு அறிவும்
தேகன் எவன்? அக் கணபதியைத்
தொழுது சரணம் அடைகின்றாம்
   

புதன், 17 பிப்ரவரி, 2010

ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகம்


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மகாலக்ஷ்மி நமோஸ்துதே 

நமஸ்தே கருடாரூட டோலாஸுர பயங்கரி
சர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

சர்வஜ்ஞே சர்வவரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே  தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே சதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹீதே தேவி ஆதிசக்தி மகேச்வரி
யோகஜ்ஞே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூலசூக்ஷ்ம மகாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸந ஸ்த்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி 
பரமேசி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே 
ஜகத் ஸ்த்திதே   ஜகன்மாத:  மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

பலச்ருதி
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத்
                                                                 பக்திமாந்நர:
சர்வசித்திமவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி சர்வதா
ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாசநம்
 த்விகாலம் ய:  படேந் நித்யம் தனதாந்ய சமன்வித:
த்ரிகாலம் ய:  படேந் நித்யம்  மஹாசத்ரு விநாசநம்
மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரசந்நா வரதா சுபா.


துக்க நிவாரண அஷ்டகம்



மங்கள ரூபிணி மதியினி சூலிணி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனி முகங்கண்ட நல கற்பகக்
                                                                                காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
                                                                            காமாக்ஷி

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே
                                                                வீசிடுவாள்
மானுறு விழியால்  மாதவர் மொழியாள் மாலைகள்
                                                                   சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
                                                                   காமாக்ஷி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபைதனில்
                                                                                 வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொரிந்திட
                                                                                வாராளே
என்குலத் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தருள்
                                                                   துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
                                                                      காமாக்ஷி

தண தண தந்தண தைவ்ளோழி முழங்கிடத் தவமணி
                                                                          நீ வருவாய்
கண கண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ
                                                                          வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
                                                                          காமாக்ஷி

பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி பஞ்ச நல பணியாளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகுவேலனைக் கொடுத்த
                                                                         நல குமரியளே
சங்கடம் தீர்த்திட சமரது செய்த நர்சக்திஎனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
                                                                             காமாக்ஷி

எண்ணியபடி நீயருளிட வருவாய் எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட
                                                             அருளிடுவாய்
கண்ணொலியதனால் கருணையேக் காட்டி கவலைகள்
                                                                    தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
                                                                      காமாக்ஷி

இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று நீ
                                                                  சொல்லிடுவாய்
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமதை தந்திடுவாய்
படர்தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை
                                                                 ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
                                                                    காமாக்ஷி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காலி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
                                                                           காமாக்ஷி

புதன், 20 ஜனவரி, 2010

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி (தேவிஸூக்த) துதி


1. தனலக்ஷ்மி  
யாதேவீ சர்வபூதேஷு  புஷ்டிரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

2. வித்யாலக்ஷ்மி 
யாதேவீ சர்வபூதேஷு  புத்திரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

3. தான்யலக்ஷ்மி 
யாதேவீ சர்வபூதேஷு  க்ஷுதாரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

4. வீரலக்ஷ்மி 
யாதேவீ சர்வபூதேஷு  த்ரூதிரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

5. சௌபாக்யலக்ஷ்மி 
யாதேவீ சர்வபூதேஷு  துஷ்டிரூபேண     ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

6. சந்தானலக்ஷ்மி
யாதேவீ சர்வபூதேஷு  மாத்ருரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

7. காருண்யலக்ஷ்மி
யாதேவீ சர்வபூதேஷு  தயாரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

8. மஹாலக்ஷ்மி
யாதேவீ சர்வபூதேஷு  லக்ஷ்மிரூபேண  ஸம்ஸ்த்திதா  
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

 

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ராகு கால துர்க்கா அஷ்டகம் (ஹரிவராசனம் மெட்டில் பாடவும் )

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை ஈன்றவள் துர்க்கா  உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா  நித்யை யானவள்
 இலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா  ஜெயமுமானவள்
அம்மையான்வல் அன்புத் தந்தை யானவள்
இம்மையான்வல் துர்க்கா   இன்பமான்வல்
மும்மை யானவள் என்றும் முழுமை  துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமானவள் துர்க்கா உடலுமான்வல்
உலக மானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள்  துர்க்கா குழந்தையானவள்
குலமுமான்வல் எங்கள் குடும்ப தீபமே
திருவுமான்வல் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகுதேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டிநீன்
ராகுதுர்க்கையே  என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக்ககனத் துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

( "தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்க்காரம் செய்வது மிகவும் நல்லது )

திங்கள், 18 ஜனவரி, 2010

விநாயகர் ஸ்லோகம் - 2


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வ விக்னோப ஷாந்தையே