மங்கள ரூபிணி மதியினி சூலிணி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனி முகங்கண்ட நல கற்பகக்
காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே
வீசிடுவாள்
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள்
சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபைதனில்
வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொரிந்திட
வாராளே
என்குலத் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தருள்
துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
தண தண தந்தண தைவ்ளோழி முழங்கிடத் தவமணி
நீ வருவாய்
கண கண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ
வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி பஞ்ச நல பணியாளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகுவேலனைக் கொடுத்த
நல குமரியளே
சங்கடம் தீர்த்திட சமரது செய்த நர்சக்திஎனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ரூபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
எண்ணியபடி நீயருளிட வருவாய் எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட
அருளிடுவாய்
கண்ணொலியதனால் கருணையேக் காட்டி கவலைகள்
தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று நீ
சொல்லிடுவாய்
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமதை தந்திடுவாய்
படர்தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை
ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காலி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி
காமாக்ஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக