Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2009

ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்



ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா 
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற- மாதாவே
செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே
ஹரியுடைய  தேவி அழகே நமஸ்தே
அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய்- நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் - மகிழ்வாய் - நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி -கொண்டு வந்து
பிருந்தை என்னும் 
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீர்ஊற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவி சுற்றுமிட்டுத் திருவிளக்கும்ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்ப்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க
மங்களமாய் துளசி மகிழ்ந்து தானேஉரைப்பாள்
தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்
அரும்பிணியை நீக்கி அஷ்டஐஸ்வர்யம் நானளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன்இல்லாதவர்க்க்குப் புத்திரபாக்கியம் நானளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்லக்கணவரைக் கூட்டுவிப்பேன்
க்ரஹஸ்தர்கள்   பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்
கோடிக்காராம் பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக் குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்தபலன்
நானளிப்பேன் சத்தியமென்று நாயகியும் சொல்லலுமே
அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன்னருளால்
தாயே ஜகன்மாதா அடியாள் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொண்டு அடியாள் செய்த சகல் பாபங்களையும் மன்னித்து காத்து ரக்ஷித்து கோரும் வரங்களை கொடுத்து அனுக்க்ரகம் செய்யவேண்டும் துளசி மாதாவே.

2 கருத்துகள்:

  1. மிகவும் சரியாகவும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் சரியான பதப் பிரிவுகளுடனும் இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு